
வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள்
முயல் குட்டி துள்ளுகிறது
தவழும் முகில் யானையாய்
துதிக்கை உயர்த்துகிறது.
பேருந்து நிலையச் சுவற்றின்
அழுக்குக் கறைகள்
கொம்பிலா ஆநிரையாகவும்
ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும்
ஆகின்றன.
சிந்திய சில துளி குளிர்பானம்
பெயர் தெரியா தூர தேசத்தின்
ஆரஞ்சு வண்ண வரைபடமாகிறது.
அரூபங்களில் கூட ரூபங்களை
பிரசவிக்கும் என் விழிகள்
கடவுளாகின்றன.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (07.11.10) இணைய தளத்திற்கு நன்றி.
4 comments:
கடைசி வரியில் அற்புதத்தை ஒளித்து வைத்து அழகாய் பின்னியிருக்கிறீர்கள் வருணன்..
அருமை..
கடைசி வரி பிடிச்சிருக்கு!
நன்றி பாலா.
நன்றி குட்டிபையா. முன்னேப்போதோ நீங்கள் வந்து பின்னூட்டமிட்டதாய் நினைவு... மீண்டும் வருக.
Post a Comment