
கவிதைகள் வார்த்தைகள்
ஏதுமின்றியும் எழுதி
வாசிக்கப்படலாம் !
வார்த்தைச் சட்டங்களுக்குள்
கவிதைகள் அடங்கிவிடுவதில்லை
எல்லா சந்தர்ப்பங்களிலும்
எதிரெதிரே அமர்ந்தவண்ணம்
விழிகள் துளைத்து நாமிருவரும்
உற்று நோக்குவதை என்னவென்று சொல்வாய்?
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
2 comments:
பார்வை மொழியே பல கவிதைகள் பேசுதே!..
அருமை வருணன்!
பார்வைகளின் சக்தியும் அவற்றின் வீச்சும் அற்புதமானவை.இக்கருத்தை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் தோழா.
Post a Comment