
நாம் பேசாத வார்த்தைகளை
எல்லாம் என் மரங்களில்
தூளி கட்டி சேமிக்கிறேன்.
விடைபெறும் ஒவ்வொரு தருணத்திலும்
என் மரங்களில் ஏதெனும் ஒன்றில்
அந்நாளுக்குரிய ஒற்றை தூளி
ஏறியமர்கின்றது.
பருவமாற்றம் நிகழ்த்திய பெருங்காற்றில்
ஓர் அந்தியில் தூளிகளனைத்தும்
ஒரு சேர அறுந்து
காற்றில் சிதறுகின்றன வார்த்தைகள்
நாம் பரிமாறிட கூச்சப்பட்டு சேமித்த
வார்த்தைகள் அனைத் துமிப்போது
பெருமழையாய் பொழிகிறது எங்கும்
வெட்கம் மிச்சமிருக்க நாணியபடி
மறைவிடம் தேடி ஓடுகிறோம் இருவரும்
அப்பெருமழையில் நனையாதிருக்க
யாருமற்ற பெருவெளியை நனைத்துக்
கரைகின்றன அவை.
6 comments:
இரு மனங்களுக்கிடையேயான ஒரு தவிப்பும் பதட்டமும் அழகாய் உடைபடுமிடம் அருமை..
தங்களின் கவிதைகளை
தற்போதுதான் வாசிக்கிறேன்
அழகாக எழுதுகிறீர்கள்
வாழ்த்துக்கள்,,,
தொடருங்கள்...
நன்றி பாலா.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ். தொடர்ந்து வாசியுங்கள்...
:) கவிதையும் படத் தேர்வும் அருமை!
நன்றி குட்டிபையா. புன்னகையோடு பின்னூட்டமிட்டதற்கு சிறப்பு நன்றிகள்.
ம்... இந்த படம் எனக்கும் மிக பிடித்திருந்தது...
Post a Comment