
நேற்றைக்கு முளை விட்ட
சிறுவிதையின் இருப்பு
சுவடின்றி பிடுங்கப்படுகிறது
இன்றொரு சூறைக்காற்றால்
கருவறையில் சுமந்திடும் கணக்கற்ற
பிள்ளைகளோடு முனங்கிக் கொண்டேயிருக்கிறது
பெருங்கடலொன்று அலை அலையாய்
மேகம் இழுத்து தாகம் தணித்திட
மேலெழும்பும் கோடையின் வெம்மை
தோற்று திரும்புகிறது
வறண்ட நிலத்தின் சுருக்கங்களை
முத்தமிட மீண்டுமொரு முறை
புழுக்கம் நிறைந்த அனாதை ராவொன்றில்
மனதின் ரணங்களை நக்கியபடி அலைகின்றன
நாலைந்து நினைவு நாய்கள்
உறங்காத என் தலையணையைச் சுற்றியபடி.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10) இணைய தளத்திற்கு நன்றி.
6 comments:
வெம்மையையும், நினைவால் உறங்கா நாளினையும் அருமையாய் இணைத்துள்ளீர்கள் வருணன்..
திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா .
நீங்கள் விரும்பியது போல இனி பல பேர் உங்கள் கவிதைகளை படித்து இன்புறுவர்! :)
நன்றி பாலா. கண்டிப்பாக. என் எழுத்துக்கள் விழிகள் வழியாய் அனேக இதயங்களில் அமர வேண்டும் என்பதே எனது பேராசை...
நேற்றைக்கு முளை விட்ட
சிறுவிதையின் இருப்பு
சுவடின்றி பிடுங்கப்படுகிறது
இன்றொரு சூறைக்காற்றால்
கருவறையில் சுமந்திடும் கணக்கற்ற
பிள்ளைகளோடு முனங்கிக் கொண்டேயிருக்கிறது
பெருங்கடலொன்று அலை அலையாய்
மேகம் இழுத்து தாகம் தணித்திட
மேலெழும்பும் கோடையின் வெம்மை
தோற்று திரும்புகிறது
வரண்ட நிலத்தின் சுருக்கங்களை
முத்தமிட மீண்டுமொரு முறை
புழுக்கம் நிறைந்த அனாதை ராவொன்றில்
மனதின் ரணங்களை நக்கியபடி அலைகின்றன
நாலைந்து நினைவு நாய்கள்
உறங்காத என் தலையணையைச் சுற்றியபடி
hats off, yella varigalum miga arumai, inaiya idhazhil vanthathukku vazhththukkal. 'வரண்ட' small spelling mistake?
வருணன் (இயற்பெயரா?) ...சமீபத்தில் தான் வலைவளாகம் துவங்கியிருந்தாலும், வெகு வருடங்களாகவே எழுதி வருகிறீர்கள் என்பது தெளிவு...நேற்றைய பொழுதை, நானும் எனது நண்பனும் தங்களின் வளாகத்தில் தான் கழித்தோம்...இருவருமே சிலாகித்தோம்( இருவேறு இடங்களில்...சிலாகிப்பு போனில் )...இந்த கவிதையை ரசிக்கும்போது வேறொரு தளத்திற்கு உங்கள் எழுத்து சென்றிருப்பதாக தோன்றியது...வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து வாசிக்கிறேன்...அந்த நண்பன் யாரென சொல்லவில்லையே...வழியில் போக்கிக் கொண்டிருப்பவன்...அவ்வளவுதான் சொல்லமுடியும்...காட்டிக்கொடுத்தல் துரோகம் இல்லையா? ...
மிகவும் நன்றி வழிப்போக்கரே! அந்த தட்டச்சுப் பிழை எப்படி கண்களுக்குத் தட்டுப்படாமல் போனது எனத் தெரியவில்லை... சுட்டிக் காட்டியதை திருத்திக் கொண்டேன். இன்னொரு முறை நன்றி.
றாஜா வருகைக்கும் தொடர்வதற்குமாக மொத்தம் இரு நன்றிகள். நண்பர்கள் இருவரின் பேச்சுக்கும் சிலாகிப்புக்கும் மத்தியில் என் எழுத்துக்கள் இருந்தது என் பாக்கியம். வருணன் என்பது என் புனைப்பெயர் மட்டுமே. எனது மின்னஞ்சல் முகவரி jolaphysics@gmail.com பொழுதிருந்தால் மடல் அனுப்புங்கள். நாம் நிறைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்.
Post a Comment