
கருக்கலைப்புகள் குறித்து
கவலை கொள்ளும் நெஞ்சங்கள்
அவதானிப்பதில்லை
அதனை விஞ்சும்
கனவு கலைப்புகள் குறித்து
மருத்துவனாக மனக்கோட்டை கட்டியவன்
மாதக்கணக்கு எழுதுகிறான்.
கவிஞனாய் கனவில் சஞ்சரித்தவன்
கடைகளில் வேலை செய்கிறான்.
இராணுவ வீரனாக ஆசைப்பட்டவன்
நாளை அடியாளாய் திரியலாம்...
யார் கண்டது?!
விதி செய்யும் விளையாட்டில்
திசையறியாது எகிறும் பந்துகளாய்
எல்லோர் வாழ்க்கையும்.
2 comments:
விதி செய்யும் விளையாட்டில்
திசையறியாது எகிறும் பந்துகளாய்
எல்லோர் வாழ்க்கையும்//
உண்மை உறைத்து கத்துகிறது.
நன்றாக இருக்கு வருணன்..
விதியின் கையில் பொம்மைகளாய் நாம் :(
Post a Comment