
கடற்கரையில் அமர்ந்திருக்கும்
என்னருகேயிருந்து
முடிவின்றி நீள்கின்றதுன்
பாதச் சுவடுகள்,
உன்னிலிருந்து கிளை பரப்பிய
ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும்
அதன் விதைகள் குறித்து
என்னுள் எழும் கேள்விகளைப் போல.
உலகப் பெருங்கவியாயினும்
உன்னைப் பற்றியெனின்
ஒரு ஆச்சரியக் குறியைத் தவிர
வேறேதும் எழுதப் போவதில்லை;
அதுவே என்னைக் குறித்தென்றால்
அந்த குறியின் நிமிர்ந்த தலை வளைத்து
கொக்கியாக்கி எனைக் கண்டு நகைப்பான்
என்றேன் – இதில்
எது உன்னை கோபத்திலாழ்த்தியது ?
4 comments:
//உன்னிலிருந்து கிளை பரப்பிய
ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும்//
அருமை வருணன்!
//எது உன்னை கோபத்திலாழ்த்தியது ?//
கண்டிப்பா பொய் கோபமாகத்தான் இருக்கும் நண்பா ;)
நல்லா இருக்கு வருணன்
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. உங்கள் இருவரின் தொடர் வருகை மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது.
'உலகப் பெருங்கவியாயினும்
உன்னைப் பற்றியெனின்
ஒரு ஆச்சரியக் குறியைத் தவிர
வேறேதும் எழுதப் போவதில்லை' very nice lines varunan.
Post a Comment