
காய்ந்த சருகு இதழ்களை
ஈரம் தேடி வருடும் நாவுகள்
கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட
குறை மதி ஊன்
ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய்
குழரும் வார்த்தைகளால்
முகில் துறந்து நிலம் அமரும்
மழையின் பெருவாஞ்சை போல
பேரன்பு திரட்டி அணைத்திறுக்கும்
நடுங்கும் விரல்கள்
அணியாத அணியாய்
கண்களையும் காதுகளையும் இணைத்திடும்
திரவப் பாலம் அவ்வப்போது
அதற்கிணையாய் ஊற்றெடுக்கும்
என் விழியோரம் ஒரு நீரோடை
மொழியுதிர்கால வார்த்தைக் காட்டில்
ஆதரவு வார்த்தை பறிக்க
அலைந்து தோற்று
அயற்சியே விஞ்சுகிறது.
எனக்கெல்லாம் தந்த எந்தையே
நின் நிலை தாங்கும் மனமொன்றைத்
தருமந்த வரமொன்றையும் தா !
உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
தற்போது தேறி வரும் என் தகப்பனுக்கு சமர்ப்பணம்...
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (27.03.11)
இணைய இதழுக்கு நன்றி.
5 comments:
very nice.
//மொழியுதிர்கால வார்த்தைக் காட்டில்//
என்ன ஒரு அற்புதமான கற்பனை ! படிக்க படிக்க மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது...
உங்கள் தந்தை முழுவதுமாய் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
பாசக் கவிதை !
நன்றி ஜெயராணி.
நன்றி கௌசல்யா... சில காலம் ஆயிற்று தங்களை சந்தித்து. மிக்க மகிழ்ச்சி. தங்களின் பிராத்தனைகளுக்கு எனது சிறப்பு வணக்கங்கள்... :)
நெகிழ்ச்சியான கவிதை.
நன்றி குட்டிபையா...
ம்... உணர்ச்சி வயப்பட்ட தருணத்தில் தான் இக்கவிதையை எழுதினேன்...
Post a Comment