
நீண்ட நேரமாகிவிட்டது
எழுதுகோலின் விழிகள்
முன்னிருக்கும் தாளினை
இன்னும் வெறித்தபடி
ஏனிப்படி?
உதிர்ப்பதற்கு வார்த்தைகள் இல்லையோ?
ஒய்யாரமாய் விரலிடையினில்
சாய்ந்து ஆனந்த சயனமோ- ஒரு வேளை?
தற்செயலாய் படிந்தது
பார்வையின் கவனம் அப்பளுக்கற்ற
தாளின் வெண்மை மீது.
இப்பரிசுத்ததிற்கு நிகராய்
நானென்ன எழுதிவிடப் போகிறேனேன்ற
தொனியில் இன்னமும் சாய்ந்தபடியே
எழுதுகோல்.
தாளின் கீழ் வலது மூலையில்
ஒரேயொரு கரும்புள்ளி
வரைந்தது திருஷ்டிப் பொட்டாய்
நான் அதை என் புத்தகமொன்றில்
பத்திரம் செய்வேன்.
4 comments:
ரொம்ப நல்ல வந்திருக்குங்க.
நன்றி கமலேஷ். தொடர்ந்து வாருங்கள்.
நன்று!
காற்றோடு... வித்தியாசமான பெயர்தான் ! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
Post a Comment