
தன்னுள் தண்ணீர்
சுமக்கும் சாதாரண குவளை
இடம் பெயரும் போது
நீரால் தடம் வரைந்து செல்லும்.
எண்ணற்ற குவளைகளால்
அளந்தாலும் குறையா அன்பைச்
சுரக்கும் இறையை
மனதில் சுமக்கும் நான் ?!
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
3 comments:
இப்படி இருந்தால் உங்கள் எதிர்காலம் உண்மையில் ஒரு கேள்வி குறி தான்..
நண்பா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இன்னு கொஞ்சம் தெளிவாக சொன்னால் நலமாக இருக்கும்...
தன்னுள் தண்ணீர்
சுமக்கும் சாதாரண குவளை
இடம் பெயரும் போது
நீரால் தடம் வரைந்து செல்லும்.//
அட அறிவியலில் அடர்த்தியின் அசைவினைக் கவிதையாக்குகிறீர்கள்.
சகோதரம், கவிஞனின் பிறப்பினையும், அவனது பாடு பொருளையும் காலம் தான் தீர்மானிக்கின்றது என்பது போல உங்களது இக் கவிதையில் உங்களைச் சார்ந்துள்ள அறிவியல் சார் விடயங்களைக் கவிதைக்கு அணிகளாகக் கொண்டு கவிதையினைப் புனைந்துள்ளீர்கள்.
//
எண்ணற்ற குவளைகளால்
அளந்தாலும் குறையா அன்பைச்
சுரக்கும் இறையை
மனதில் சுமக்கும் நான் ?!//
இதில் நீங்களும் வாழ்வின் தடமாக இருக்கிறீர்களா எனும் சந்தேகத்தை உங்களிடம் நீங்கள் கேட்பது போல இருக்கிறது இக் கவிதை. என்னைப் பொறுத்த வரை இக் கவிதையினை அடிப்படையாக வைத்து ஒரு விடயத்தினைச் சொல்லலாம். அறிவியலைத் தடமாக்கி இன்றைய கால கட்டத்தில் தன் இலக்கிய உவமைகளையும், இயற்கை அணிகளையும் தவிர்த்து உங்களின் தொழில் சார் அல்லது நீங்கள் வாழும் அறிவியல் சார் உலக கருத்துக்களை கவிதைகளில் பரவியிருக்கிறீர்கள்.
இன்னும் இன்னும் நிறையக் கவிதைகளைத் தர வாழ்த்துகிறேன்.
Post a Comment