
முழுமையானது எது?
நானா?
இல்லை. என்னிடம் குறைகள்
பல உண்டு.
விசாரித்ததில் அடுத்தவரிடமும்.
நிலவோ?
ஆனால் அது தேய்ந்து தேய்ந்து
வளர்கிறதே!
சூரியனோ?
ஒரு நாள் அதுவும் மரிக்குமென்கிறான்
மெத்தப் படித்த விஞ்ஞானி.
எல்லையில்லா பேரண்டத்தில்
முழுமையானதொன்று உண்டு.
ம்...
சூன்யம் !
5 comments:
சூன்யம் = முழுமை!
வருணன், அறிவின் தேடலில் ஒரு அடிக்கோடு இட்டுச் செல்கிறது இது!
அருமை.வாழ்த்துக்கள்
நன்றி பாலா... சூன்யத்தை முழுமையென்று ’சென்’ சொல்கிறது. அதன் பாதிப்பில் நான் முன்வைத்த சிறிய கருத்திது.
நன்றி சரவணன். நாம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை பூர்வீகமாய் கொண்டிருக்கின்றோம் என நினைக்கிறேன். மகிழ்ச்சி நண்பா...
good one da, but if zero is complete then so is every number.
சூரியனோ?
ஒரு நாள் அதுவும் மரிக்குமென்கிறான்
மெத்தப் படித்த விஞ்ஞானி.
எல்லையில்லா பேரண்டத்தில்
முழுமையானதொன்று உண்டு.
ம்...
சூன்யம்//
கொஞ்சம் வித்தியாசமான கற்பனை முயற்சி. ரசித்தேன். அறிவியலைக் கொஞ்சம் கலந்து கவிதையில் அண்டவெளியின் சூன்யப் பொருளையும் வார்த்தைகளுக்குள் அடக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
Post a Comment