
பிடிகள் தேடி கைகளும்
ஆதாரங்கள் தேடி கால்களும்
அலையும்
உயிர்வளிக்காய் பிதற்றும்
நுரையீரல்கள்...
வெள்ளி மறைந்து
நாளை குறித்த ஐயங்கள்
முளைக்கையில்
எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி
தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும்.
பெருவேதனைக்குப் பின்னே
பிரசவித்த மகவு கண்டு
வலி மறந்து
புன்முறுவல் பூப்பாள்
சில நொடிகளுக்கு
முன் பிறந்த அன்னை.
5 comments:
அருமையான
கவிதை
நல்ல கவிதை.
நன்றி கவி அழகன்... நன்றி ரத்னவேல் அவர்களே. தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிப்பு வேண்டுகிறேன்.
மாலையில் பறவைகளில் கூடடையும் ஒலி மறு நாளைக்கான மங்கல வாத்தியங்கள். கவிதை சிந்திக்க வைக்கிறது,
நன்றி சாகம்பரி.
Post a Comment