
அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள
உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை
வெண்புகை குடை விரித்த
மலைச் சிகரத்தினுச்சியில்
காற்றில் தவழ்ந்த பெயரோ
நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி
அடர் பச்சை ஊசியிலை மரங்களின்
இலைகளின் கைகுலுக்கி
நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது.
மலையின் மடியில் வீசிய
நெற்பயிரின் தலை கோதி
நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி
கரைகின்றது காற்றில்
இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட
இனியெனக்குச் சொந்தமில்லை.
அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்பட்டது.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.06.11)
இணைய தளத்திற்கு நன்றி
5 comments:
ovvaru varikalum arumai vazhathukal.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நன்றி ரத்னவேல் அவர்களே. நன்றி ஜெஷீலா. தங்கள் இருவரின் தொடர் வருகைக்கு எனது நன்றிகளும் அன்பும்...
அருமை நண்பரே வாழ்த்துகள் .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜேஸ்.
Post a Comment