
மாடியிலுள்ளது தனியறை
தனிமை கொல்லும்
விடுமுறை மாலைகளில்
தெரு பார்த்தல் பொழுதுபோக்கு.
சரஸ்வதி உருவம் தாங்கிய
பெரிய சாளரத்தின்
வளைந்த கம்பிகளுக்கிடையே
பார்க்கும் போதாகிலும்
ஆண்களை சுவாரசியமற்றுப் பார்ப்பதும்
நங்கையர் கண்டால் அவயம் தேடுவதுமான
பசித்த கண்கள் ஒரு ஒழுங்கமைவுக்குள்
வராதாவென நினைத்திடும் வேளையில்
வராதென்பது போல சட்டென
மிணுக்கி எரிகிறது மிக அருகிலிருக்கும்
சோடியம் தெரு விளக்கொன்று.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (30.01.11) இணைய தளத்திற்கு நன்றி.
4 comments:
சின்ன வயதில் சில நேரங்களில் தெருபார்த்தல் என்பதே இன்பம் தான்! :) நன்று வருணன்!
மேல்மாடி தனியறை ஜன்னலும், வகுப்பறை ஜன்னலும் தான் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன தெரு பார்க்கும் பொழுதுகளில்..
கவிதை நல்லா இருக்கு..
மிக்க நன்றி பாலா, வெறும்பய, ஜெ.ஜெ.
Post a Comment