
என் கனவுத் துவாரங்களின்
வழியே கைகளுயர்த்தி
தப்பிவிட எத்தணிக்கிறேன் நான்
வெளிப்பட்ட கைவிரல்கள்
படிக்கட்டுகளாய்...
ஒவ்வொன்றாய் மேலேறிய நீ
ஏதோ ஒன்றில் இளைப்பாறுகின்றாய்.
என்னுள்ளேயிருந்து வானம் பார்க்கிறேன்
மேலே பறக்கும் பட்சிகளின் மத்தியில்
படியிலமர்ந்திருக்கும் நீயோ அமைதியாய்
எனக்கும் மேலேயிருக்கும் ஆகாயம் வெறிக்கிறாய்.
கொஞ்சம் அமுதத்தையும்
கொஞ்சம் விடத்தையும்
மாறி மாறி ஊட்டுகின்றது
நம் பிரியம்
இருவருக்குமே !
2 comments:
அருமைக்கவிதை.
வாழ்த்துகள்.
நன்றி தனா.
Post a Comment