
போவதாய் பலமுறை சொல்லி
கடைசியாய் விடைபெற்றுச் செல்வேன்
உனக்கு மட்டுமே தெரியுமாறு
மாய பிம்பமாய் என்னை விடுத்து
வீடு சேர்ந்து
சகலரும் துயிலும் வரை காத்திருப்பேன்.
உன்னைப் போன்றதொரு மாய பிம்பத்திற்கான
தேடல் துவங்கும்...
அலைந்து கலைத்த விழிகளும், இருளினுள்
அலசிக் கலைத்த விரல்களும் ஒரு சேர
அமிழ்த்திடுமென்னை மஞ்சத்திலே
வீழ்ந்த மறுகணமே ஓடிவந்து அள்ளும் என்
த னி மை!
2 comments:
பிடித்திருக்கிறது... ரசித்தேன்...
நன்றி பிரபா. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க...
Post a Comment