
நெடி நிரந்தரமாய் தங்கிவிட்டது காற்றில்
படைகள் வெல்ல ஆயுதம் தேவை
படைக்கலன்களோ பழுது நிலையில்
நம்பிக்கை முனை மழுக்கிய
மனித வாட்கள்
காத்துக் கிடக்கின்றன- துரிதமாய்,
லாவகமாய் இயக்கும் கைகளுக்காய்
எதிரியின் கைகளில் யந்திரத் துப்பாக்கி
பெரும் குடிகார சிறு ரவைகள்
தனியாத் தாகத்துடன் பருகுகின்றன
வெதுவெதுப்பான இளரத்தத்தை
பால்கட்டிய தாய்மாரின் தனங்கள்
இறந்த குழந்தைகளுக்காய் கனக்கின்றன
உயிர் செய்யும் சூட்சுமங்கள்
தடம் மாறி சமாதியாக்குகின்றது
உயிருடன்
வடிவான மகளிரை
கொன்றவனின் குறியறுக்கச்
சபதமேற்றுப் புறப்படும்
யுவனின் வெஞ்சினத்தில் உருவெடுத்த
பெருந்தனலில் உருகிக் கிடக்கும்
மலட்டுக் காட்டில்
அவநம்பிக்கையின் சாம்பல் மேட்டினின்று
துளிர்க்கிறது நம்பிக்கையின் தளிரொன்று.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(02.01.11) இணைய தளத்திற்கு நன்றி.
4 comments:
//அவநம்பிக்கையின் சாம்பல் மேட்டினின்று
துளிர்க்கிறது நம்பிக்கையின் தளிரொன்று.//
ரொம்ப உணர்ச்சி பூர்வமான வரிகள்...
பகிர்வுக்கு நன்றி
NALLA KAVITHAI., THOTARUM VAAZHKKAI MURAN., NAMBIKKAI VELLUM. ENATHU BLOG:puducherryanbazhagan.blogspot.com
நன்றி ஆனந்தி.
நன்றி அன்பழகன். கண்டிப்பாக தங்களது வலைப்பூவில் பதிவுகளை வாசிக்கிறேன்.
Post a Comment