
இல்லாத எல்லைக்குள்
சொல்லாத சொல்லைத்
தேடும் யாத்ரீகனின்
கைவிளக்கு
எண்ண ஊடல்களின்
சொற்கூடல்
கடக்கும் காலனின் நிழல்
கனவுக் கடலை
கடக்கும் தோனி
சிந்தனை நிலங்களடியில்
கணக்கற்ற கனிகளின்
எதிர்காலம் தேக்கியிருக்கும்
ஒற்றை விதை
வாழ்வின் அர்த்தம் வேண்டும்
வார்த்தை யாகம்
கவிஞனின் இருப்பின் சாட்சி
அனைத்துமளித்த அகிலத்துக்கு
அவனது நினைவுப் பரிசு
ஒரு வாழ்க்கையில்
ஓராயிரம் வாழ்வை
வாழத் துடிக்குமவன்
பேராவலின் நீட்சி.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(17.10.11)
இணைய இதழுக்கு உளம் கனிந்த நன்றி.
7 comments:
வாழ்வின் அர்த்தம் வேண்டும்
வார்த்தை யாகம்
கவிஞனின் இருப்பின் சாட்சி
// இறவாக் கவிதைகள் படைப்பது கவிஞனின் சிறப்பு. நன்று.
///கடக்கும் காலனின் நிழல்///
கடந்த காலத்தின் பாதச் சுவடு!
கற்பனையூரின் சொர்க்கபுரி!
கணக்கில் அடங்கா
இதயங்களின் உணர்சிகடலின் துளி.
கவிதை நன்று ...
சகோதிரி சாகம்பரி ஆற்றுபடுத்தியதால் இவ்விடம் வந்தேன்... நன்றி!
nalla padhivu...
chandhan-lakshmi.blogspot.com
தோழி சாகாம்பரிக்கு மனமுவந்த நன்றிகளும், அன்பும். நீண்ட காலம் வர இயலாமைக்கு மன்னிக்க.
தமிழ் விரும்பி-க்கு எனது வரவேற்பு. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி.
தோழி தனலட்சுமிக்கு நன்றி. நிச்சயம் தங்கள் வலைப்பூவிற்கு பொழுதிருக்கையில் வருகின்றேன்.
ஒரு வாழ்க்கையில்
ஓராயிரம் வாழ்வை
வாழத் துடிக்குமவன்
பேராவலின் நீட்சி..
நான் சமீபத்தில் படித்த வரிகளில் என்னை மிகவும் மனம் கவர்நதவை..
வாழ்த்துக்கள்
Post a Comment