
கவிபுனைய ஆரம்பித்த
காலந்தொட்டே என்னுள் நீ
இருந்திருந்தால்
இன்னும் புனைந்திருப்பேன் ஆயிரமாயிரம்.
கண்ணெதிரே பிரம்மாண்ட விருட்சமாய்
வானம் மறைத்து
கிளைகள் விரவிக் கிடக்கிறாய்
இப்போது
உன் நிழலடியில் நின்று
உன்னுயரம் பார்த்து
மலைத்துச் சலிப்பதிலேயே
கழிகின்றதென் பொழுதுகள்
என் கவிக்கனிகளை ருசிப்பவர்க்கு
எப்படிச் சொல்ல முடியுமென்னால்...
என் மரத்தின் வேர்கள்
உன் நிலத்தினுள் புரையோடிக் கிடப்பதை?
3 comments:
very nice kavithai.thotarnthu elutha vazhathukal
சுவையான கவிதை. மரம் விழுந்தாலும் விழாத வேர்கள் சில - காதல் போல.
நன்றி ஜெஷீலா.
நன்றி அப்பாதுரை...
தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.
Post a Comment