
அர்த்தமிழந்த வார்த்தைகள்
சமைக்கும் தருக்கச் சகதியுள்
அமிழ்ந்தென்ன லாபம்
துடிதுடிக்க காலத்தைக்
கொல்வதைத் தவிர
கால்களையும் கைகளையும்
குரல் வளையையும் சுற்றியிறுக்கும்
மொழியின் வேர்களும் கொடிகளும்
மண்டிய வனம்
சொற்களுக்கு அனுமதியில்லா
நகரமொன்று வேண்டும்
வன வாசம் துறந்து
நகர் புக.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(22.05.11) இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றி.
5 comments:
வாசித்தேன்ரசித்தேன் .....வனவாசம் துரத்து நகர புக ..நகருக்கு வர போறிங்களா வேண்டாம்
வித்தியாசமான சிந்தனை..
தோழர்கள் சிவா மற்றும் சௌந்தருக்கு மனமார்ந்த நன்றி.
அழகான தமிழ் வார்த்தைகள்.ரசித்தேன் !
நன்றி ஹேமா.
நன்றி தோழரே [ரத்னவேல்].
Post a Comment