
செவிகள் செரிக்காத இசை
விழிகள் புசிக்காத கவிதை
நினைவுகள் தளும்பாத மனது
கனவுகள் கலையாத இரவு
இவையெல்லாம் அழகுதான்
கூடவே சேர்த்துக் கொள்ளலாம்
அறியாதவருக்காய் வழியும்
ஒரு துளி கண்ணீரையும்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(27.12.10) இணைய தளத்திற்கு நன்றி
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
10 comments:
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் எனும்போது அறியாதவருக்காய் வழியும் கண்ணீரிலும் ஆண்டவன் தெரிவான்!.
அருமை வருணன்.
பிறக்கும் புத்தாண்டு வளமையாய் அமைய என் வாழ்த்துக்கள் :)
உண்மை தான் நண்பரே
அருமை நண்பரே .... வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நன்றி பாலா. வரும் ஆண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாக அமையட்டும்...
நன்றி திகழ். வித்தியாசமானது தங்கள் பெயர். நன்று.
நன்றி அரசன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2010/12/1.html
நன்றி கமலேஷ்.
மனமார்ந்த நன்றி ரமேஷ்
Post a Comment