தேவபாஷை

Monday, January 24, 2011



குதூகலித்து குரலெழுப்பி
துள்ளி வந்தது மழலையொன்று
கோவிலுக்குள்
முழந்தால் படியிட்டு
உருகியுருகி
வணங்கிக் கொண்டிருந்த
கிழவர் ஒருவரும்
முக்காடிட்டு அமர்ந்திருந்த
குடும்பத் தலைவியும்
ஒரு சேர அதட்டினர்
உஷ்... என்று.
அவர்களுடன் அதுவரை மழலையில்
உரையாடிய கடவுள்
பேச்சை நிறுத்தினார்.
அவருக்கு தெரிந்திருந்தது
மாந்தர் ஒரு போதும்
தன் குரலை இனங்கண்டு
செவிசாய்க்க மாட்டாரென...
சிலையாய் தொங்கி
சிலுவையில் அமைதியானார்
கடவுள்.

8 comments:

Anonymous said...

எக்ஸலெண்ட் வருணன்!
மழலை மொழி - தேவ பாஷை செம! :)

ஆர்வா said...

அட அட அட.. குழ்ந்தையின் ஊடே ஒரு வித்தியாசமான அனுபவம்.. கடைசிவரி நச்.. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்..


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

வருணன் said...

நன்றி பாலா. மழலைகள் அனைவரும் இறைவனின் பிரதிகள் தானே?!

வருணன் said...

நன்றி கவிதை காதலன். இன்னும் எழுதியிருக்கலாம் தான். ஆனாலும் இக்கவிதை தன்னை இத்தோடு நிறுத்திக் கொண்டதே! என்ன செய்ய?

பத்மா said...

good good

கா.வீரா said...

அருமை

வருணன் said...

நன்றி பத்மா.

வருணன் said...

நன்றி வீரா.

Post a Comment